தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீப காலமாக அதிமுவை ஊழல்சக்தி என குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், “விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகிய மூன்று தலைவர்களின் புகைப்படமும், கடன் வாங்கி தலைவர்களை வைத்துக் கொண்டு இருக்கிற விஜய், அதிமுகவைப் பற்றி பேசுவது அவருடைய அறியாமையை காட்டுகிறது” என்றார்.




