2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிப்பதைத் தடை செய்யும் ‘புகையிலையற்ற தலைமுறை’ சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘புகையிலை மற்றும் வேப்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, 17 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள் சிகரெட் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2009ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது.




