சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..??

Oplus_131072

 

வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.

தேனில் அதிக அளவு இரும்பு சத்தும் வைட்டமின்களும் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியது.

இவை இரண்டை ஒன்றாக கலந்து சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு நன்மை தருகின்றது. தற்போது வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் என்ன என்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 1

தேன் – தேவையான அளவு

செய்முறை :

மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும்.

ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும். 24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள்.

மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும். இதை குடித்து வரவும்.

நன்மைகள் :
வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J தருகின்றது.

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.

இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.

செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது.

நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.

இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.

Read Previous

ருசியான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி..??

Read Next

அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular