மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். 3-ஆவது மொழிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது; அதற்குப் பதிலாக பள்ளிகளே உள்மதிப்பீட்டுத் தேர்வை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




