Oplus_131072
ருசியான சத்து உருண்டை
கேழ்வரகு, பொட்டுக்கடலை, சோளம், தினை, கோதுமை, வேர்க்கடலை ஆகியவற்றை சம அளவு எடுத்து வெறும் வாணலியில் மிதமாக வறுத்துக் கொள்ளவும். இதை மிக்சியில் பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். பனங்கற்கண்டை பொடித்து சலித்து வைத்துக் கொள்ளுங்கள். சாயங்கால வேளைகளில் சிறிதளவு நெய்யை சூடாக்கி அதில் தேவையான அரைத்த பொடி மற்றும் பனங்கற்கண்டைப் பொடியை கலந்து உருண்டைகளாகப் பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.




