சொந்த நாட்டில் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் விளையாடியது கூடுதல் அழுத்தத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா தெரிவித்துள்ளார். தொடரின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே டக்-அவுட் ஆனது தன்னை முழுமையாக உடைத்துவிட்டதாகவும், அந்த ஏமாற்றம் தனது பீல்டிங்கிலும் எதிரொலித்து சில மிஸ்-பீல்டிங்குகளை செய்ய வழிவகுத்தது என்றும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.




