அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை – சபாநாயகர் அறிவிப்பு..!!

தவெக அரசுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்த அதிமுகவின் 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 09) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 21 எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என மனு அளித்திருந்தார். அதனை ஏற்று 21 பேர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 25 பேரில் எஞ்சியுள்ள 4 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். முன்னதாக அதிமுகவில் இருந்து 4 எம்எல்ஏக்கள் ஏற்கனவே விலகி தவெகவில் இணைந்துவிட்டனர்.

Read Previous

கண்டிப்பாக இந்தக் கதையை அனைவரும் படிக்க வேண்டு கிறேன்..!! காலத்தை வென்ற கதை இது..!!

Read Next

‘சிங்க பெண்’ படைக்கு புதிய சீருடை மற்றும் லோகோ அறிமுகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular