காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.
மேகதாது அணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரமும், மாநிலத்தின் நீர்வள உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த முக்கிய பிரச்சினையை மக்களவையில் உடனடியாக விவாதித்து, தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.




