வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை வென்றெடுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் விகிதாச்சார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தொடங்கப்பட்ட போராட்டம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது, சமூகநீதிக்கான நீண்டகால போராட்டத்தின் முதல் மைல்கல் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் மற்றும் நியாயமான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூகநீதியை முழுமையாக நிலைநாட்டும் நோக்கில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது என்றும் தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.




