கர்நாடகாவில் பயங்கரம்: ஜிப்லைன் பாதுகாப்பு பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலாப் பயணி..!!

 

கர்நாடக மாநிலம் தண்டேலியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஜிப்லைன் சவாரி மேற்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாப்பு பூட்டு திடீரென செயலிழந்ததால் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேம்பட்ட சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விடுதியின் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

Read Previous

“இளைஞர்கள் மீது அதிக வெறுப்பு கொண்ட பிரதமர் மோடி” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

Read Next

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular