உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தொடக்கத்தில் இடம்பெற்ற புதிய டைட்டில் கார்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமாக இடம்பெறும் அடைமொழிக்குப் பதிலாக, “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய்” என்ற புதிய டைட்டில் கார்டு திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய டைட்டிலை திரையரங்குகளில் கண்ட ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பி, திரையின் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல இடங்களில் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளன.




