தூத்துக்குடி லாக்கப் மரணம்: முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்..!!

 

 

தூத்துக்குடியில் நடைபெற்றதாகக் கூறப்படும் லாக்கப் மரணம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

நாவல் பழம் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

Read Next

மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் பதிவேற்றம்: எம்பிபிஎஸ் மாணவர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular