சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நிவேதா, மிகவும் கடினமான சூழ்நிலையிலும் விடாமுயற்சியுடன் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மின்சார வசதியே இல்லாத வீட்டில் படித்தும், தனது இலக்கை அடைந்துள்ள நிவேதா, தங்கள் கிராமத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் மருத்துவராகி மலைவாழ் மக்களுக்கு சேவை செய்வதே தனது கனவு என தெரிவித்துள்ளார்.
ஆனால், குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், அரசு மருத்துவக் கல்லூரியில் தனக்கு இடம் வழங்கி உதவுமாறு முதலமைச்சர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிவேதாவின் விடாமுயற்சியும், மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கமும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவருக்கு தேவையான உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.




