காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ₹30 லட்சம்.. முதலமைச்சர் விஜயின் பாராட்டு..!!

 

 

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு, தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

 

ராஜா முத்துப்பாண்டியின் இந்த சாதனை தமிழக இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்காலத்திலும் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் மேலும் பல பெருமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். தமிழக அரசின் இந்த ஊக்கத்தொகை, விளையாட்டு வீரர்களை மேலும் சாதிக்க ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Read Previous

Wi-Fi-யை கண்டுபிடித்தது யார் தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி..!!

Read Next

சிறையில் உள்ள மார்கண்டேயனை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பான அரசியல் நகர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular