தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை இன்று (ஜூலை 27) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பின் அமைப்பாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் கே. ராமசாமி தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் ஏ.பி. கருப்பையா, துணை அமைப்பாளர்கள் சி. யோகநாதன், பாலசிவபிரசாத், தலைமை செயல் அலுவலர் எம். சஞ்சீவி மற்றும் தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் டி.ஆர். அம்மையராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், விவசாயிகளின் நலன், வேளாண் உற்பத்தி மேம்பாடு மற்றும் நிலையான விவசாய வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சருடன் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.




