வங்கி மேலாளரை அறைந்ததாக சர்ச்சை.. மு.க. அழகிரியின் மகள் மீது போலீஸ் நடவடிக்கை..!!

 

 

சென்னையில் உள்ள தனியார் வங்கி கிளையில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வங்கி நிர்வாகம் அளித்த புகாரின்படி, வாக்குவாதம் முற்றிய நிலையில் கிளை மேலாளர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், வழக்கின் முழு விவரங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

இயற்கை வேளாண்மை வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜயுடன் ஆலோசனை..!!

Read Next

டிக்சன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular