ராமேஸ்வரத்தில் ‘இக்னைட் இந்தியா 2026’ நிகழ்வில் பங்கேற்றார் அண்ணாமலை..!!

 

 

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-வது நினைவு நாளையொட்டி, ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ‘இக்னைட் இந்தியா 2026’ நிகழ்வில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அவர், மாணவர்கள் உருவாக்கிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) சார்ந்த புதுமையான திட்டங்களை பார்வையிட்டு பாராட்டினார். டாக்டர் அப்துல் கலாம் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, தன்னிறைவு இந்தியாவை கனவாகக் கொண்ட தொலைநோக்கு பார்வையுடைய தலைவரும் ஆவார் என்றும், அவரது கனவை நனவாக்க இளைஞர்களை அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் ஊக்குவித்து வழிநடத்துவது காலத்தின் தேவை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Read Previous

டிக்சன் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் முதலமைச்சர் விஜயை சந்தித்து ஆலோசனை..!!

Read Next

அப்துல்கலாம் நினைவிடத்தில் மனமுருகி தியானம் செய்த ‘கில்லி’ பட நடிகர் தாமு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular