ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இந்த சிறப்பான சாதனைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ‘X’ சமூக வலைதளப் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர் பயிற்சி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ராஜா முத்துப்பாண்டியின் வெற்றிப் பயணம் மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என்றும், எதிர்கால போட்டிகளிலும் அதிக சாதனைகளை படைக்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.




