மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் நலனுக்கு எதிராக சதி செய்வதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகள் தமிழகத்தின் உரிமைகளையும், காவிரி நீர் பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தமான் தீவுகளில் உள்ள காடுகளை பாதுகாக்க குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மேகதாது பகுதியில் காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து அணை கட்டக்கூடாது என ஒரு வார்த்தை கூட கூறவில்லை என அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய நீர்வள பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மேகதாது அணை விவகாரத்தில் ராகுல்காந்தி அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வரி கருத்து தெரிவித்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதற்கு தான் தயாராக இருப்பதாக அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் காவிரி உரிமையை பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்ய முடியாது என்றும், அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




