கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது.
ஆகஸ்ட் 3-ந்தேதி நடைபெற உள்ள நிரபுத்ரி விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், கேரளாவில் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் வானிலை நிலவரத்தை கவனித்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




