கடலூர் பெரிய காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசிக்குமார் (31), தனது காரைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சசிக்குமாரை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சசிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.




