சென்னை பாலவாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் இல்லத்தில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் நேற்று இரவு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் ஏற்கெனவே வகித்த முக்கியப் பொறுப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பினர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இரு முறை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்தத் திடீர் ஆலோசனை அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




