தமிழக அரசின் EDII-TN நிறுவனம் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் 20-ம் தேதி வரை ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ நடைபெற உள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க 10-ம் வகுப்பு தேர்ச்சி, அடிப்படை கணினி அறிவு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ட்ரோன் இயக்கம் மற்றும் ஊடகத் துறையில் அதன் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, ட்ரோன் சினிமாடோகிராஃபி, வான்வழிப் புகைப்படம் மற்றும் DGCA விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பயிற்சியில் கற்றுத்தரப்பட உள்ளன. ட்ரோன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமையும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் www.editn.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 8668100181 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.




