திருவொற்றியூரில் 12-ம் வகுப்பு மாணவர் கொடூரக் கொலை!

 

சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த தனுஷ் என்ற மாணவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் பள்ளிக்கு அருகிலேயே நடைபெற்ற இந்த சம்பவத்தால் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கு காரணமான மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

இலங்கை – இந்தியா முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்!

Read Next

சுதந்திர தினத்தையொட்டி நாளை கிராம சபை கூட்டம்: அமைச்சர் ஆனந்த் அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular