திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.12) ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 68 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
பக்தர்களுக்காக 4 லட்சத்து 34 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தேவஸ்தானம் கூறியுள்ளது.
இலவச தரிசன பிரிவில் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 12 முதல் 15 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.




