சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவது காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதனைத் தவிர்க்கும் வகையில், மண்டல ஐ.ஜி.க்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் போலீசாரின் வாகனங்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விதிமுறைகளை மீறும் காவலர்களுக்கு கட்டாயமாக ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு விதிகளை பொதுமக்களுக்கு வலியுறுத்தும் காவல்துறையினரே அவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.




