“தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் மாட்டப்போகிறார்கள்!” – உதயநிதி!

 

 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

 

அப்போது, “சீட்டுக்கட்டில் ஒரு ஜோக்கர் இருப்பார்; ஆனால் இங்கு 52 ஜோக்கர்கள் உள்ளார்கள்” என விமர்சித்தார்.

 

மேலும், தற்போதைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் யாரென்பது மக்களுக்குத் தெரியவில்லை என்றும், அவர்களை குறிப்பிட்ட அடைமொழிகளுடன் கூறினால்தான் மக்கள் அடையாளம் காணும் நிலை இருப்பதாகவும் உதயநிதி கூறினார்.

 

“திமுக அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றியதைத் தவிர, தவெக அரசு எந்த சாதனையும் செய்யவில்லை” என குற்றம்சாட்டிய அவர், தவெகவின் ஒவ்வொரு அமைச்சரும் எதிர்காலத்தில் மாட்டப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Read Previous

“கைது செய்து அழைத்துச் சென்றபோது டிரிப் போவதுபோல் ஜாலியாக சென்றோம்!” – உதயநிதி!

Read Next

ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போனதாக புகார்! KFC-யில் திடீர் சோதனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular