“இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்”.. வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை!

 

 

சென்னையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி, ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று (ஆக.16) பேரணி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “வி தி லீடர்ஸ் அமைப்பில் 73 நாட்களில் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்ப்பதே இலக்கு” என்றார்.

 

மேலும், சென்னையில் தற்போது சுமார் 10 சதவீதம் மட்டுமே பசுமைப் பகுதிகள் இருப்பதாகக் கூறிய அவர், பூமி வெப்பமடைந்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Read Previous

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

Read Next

தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: ஜெய்சங்கரை சந்திக்கிறார் அமைச்சர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular