“கருக்கலைப்பு பெண்ணின் உடல் உரிமை!” – சட்டப்பேரவைத் தலைவருக்கு CPI கண்டனம்!

 

 

கத்தோலிக்க அமைப்பின் நிகழ்ச்சியில் கருக்கலைப்புக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் பேசியதாக கூறப்படும் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து CPI மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “கருக்கலைப்பு என்பது பெண்ணின் உடல் உரிமை, மருத்துவம் மற்றும் உளநலம் சார்ந்த விவகாரம்; அது மதக் கோட்பாடு அல்ல” என தெரிவித்துள்ளார்.

 

மேலும், அரசியலமைப்புப் பதவிகளில் இருப்பவர்கள் மதவாதக் கருத்துகளைப் புகுத்தாமல், மதச்சார்பற்ற மற்றும் அறிவியல் கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

சட்டப்பேரவைத் தலைவரின் கருத்து தொடர்பாக CPI தெரிவித்துள்ள இந்தக் கண்டனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தா?” – முதல்வர் விஜயை விமர்சித்த முன்னாள் அமைச்சர்!

Read Next

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி கொலை? சாக்குப்பையில் இளம்பெண் சடலம் மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular