கேஸ் சிலிண்டர் பெற e-KYC கட்டாயம்! கடைசி தேதி ஆகஸ்ட் 23!

 

 

சமையல் எரிவாயு விநியோகத்தில் தொடர்ந்து பயன் பெறும் வகையில், வாடிக்கையாளர்கள் தங்களது e-KYC விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக e-KYC முடிக்க ஆகஸ்ட் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக தற்போது கால அவகாசம் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் எந்தவித தடையும் ஏற்படாமல் இருக்க விரும்பும் பயனர்கள், தங்களது எரிவாயு ஏஜென்சியை அணுகியோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ e-KYC நடைமுறையை விரைவாக முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

காலக்கெடு முடிவதற்குள் e-KYC-யை புதுப்பித்து, சமையல் எரிவாயு சேவையை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

Read Previous

முந்திரி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

Read Next

“மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறேன்..” – அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular