CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

 

 

சி.ஜி.எல். தேர்வை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள 69 பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), “ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு 2026” தொடர்பான அறிவிப்பை கடந்த மே 21-ம் தேதி வெளியிட்டது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

 

இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் சுமார் 12,256 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு மையங்களாக பயன்படுத்தப்படும் பள்ளிகளில் மாணவர்களின் வழக்கமான வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க, குறிப்பிட்ட 69 பள்ளிகளுக்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Read Previous

“மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறேன்..” – அனுபமா பரமேஸ்வரன் உருக்கம்!

Read Next

27 வயதில் காலமான பிரபல நடிகை… தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular