தாயுடன் பைக்கில் சென்ற 12-ம் வகுப்பு மாணவி பரிதாப உயிரிழப்பு!

 

 

ஸ்ரீபெரும்புதூர் அருகே தாயுடன் பைக்கில் சென்ற 12-ம் வகுப்பு மாணவி அர்ச்சனா (16), பின்னால் வந்த கலவை லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. லாரியின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

 

விபத்துக்குப் பிறகு லாரியை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டுநர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Read Previous

ரயிலில் தகராறு.. RPF வீரரை பிளேடால் தாக்கிய நடிகை கைது!

Read Next

ஹர்திக் பாண்டியாவை குறிவைக்கும் CSK, KKR? வெளியான பரபரப்பு தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular