சென்னை விருகம்பாக்கம் பகுதி தவெக இணைச் செயலாளர் முத்துக்குமார் மீது, கட்சியில் புதிதாக இணைந்த சிலர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
தன்னை பதவியில் இருந்து விலகக் கோரி மிரட்டி தாக்கியதாக முத்துக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சியின் நிர்வாகி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தவெக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




