உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, “அடுத்ததாகத் தங்கையையும் என்னையும் கொல்ல வேண்டும்” என வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் தனது தங்கையையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவர், தொடர்ந்து தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




