நீட் முறைகேடுகளை கண்டித்து கடந்த மாதம் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ராகுல் காந்தி சென்றார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதுடன், சிலர் மீது பெல்லட் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
மேலும், பெல்லட் குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரையும் தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.




