“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

 

 

எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாது என்பதற்காகவே முதல்வர் விஜய் அரசு பணத்தில் கார் வாங்கிக் கொடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

 

திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், எம்எல்ஏக்களுக்கு சொந்தப் பணத்தில் கார் வாங்கிக் கொடுக்காமல், மக்கள் வரிப்பணத்தை பயன்படுத்துவது தவறானது எனக் குற்றம்சாட்டினார்.

 

மேலும், 6 எம்எல்ஏக்களின் பதவியை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் தேர்தல் வருவது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

எம்எல்ஏக்களுக்கான அரசு கார் திட்டத்தை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

Read Next

பேங்க் ஆஃப் பரோடாவில் 2,482 வேலைவாய்ப்புகள்! தமிழகத்தில் 134 இடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular