மாணவர் போராட்ட விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!

 

 

இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், தமிழக தலைமைச் செயலரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.

 

மாணவர் போராட்டம் தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

Read Next

இடதுசாரிகளை அடையாளம் காண சுற்றறிக்கை? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular