காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு!

 

 

சென்னை கேளம்பாக்கம் அருகே காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் பிரவீன்குமார் (23) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த பிரவீன்குமார், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 

இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏழுமலை (48), மணிகண்டன் (31), நந்தீஸ் (19) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

LPG சிலிண்டர் e-KYC: நாளையுடன் அவகாசம் முடிவா?

Read Next

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular