கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

 

 

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், திடீரென மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

 

அப்போது பள்ளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர் பூமிநாதன் (37), மண்ணில் புதைந்தார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பூமிநாதனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பிரவீன்குமார் கொலை: “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – நீலம் பண்பாட்டு மையம்!

Read Next

செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular