செப்டம்பர் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!

 

 

திரையரங்குகளில் வெளியான சில நாட்களிலேயே திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே படங்களை ஓடிடியில் வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உத்தரவாதக் கடிதம் அளித்தால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்படும் வரை புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், புதிய திரைப்படங்களின் வெளியீடு மற்றும் தயாரிப்பு பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Read Previous

கழிவுநீர் தொட்டி அமைக்க தோண்டிய பள்ளத்தில் மண் சரிவு: தொழிலாளர் உயிரிழப்பு!

Read Next

முன்விரோத தகராறில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular