ஐரோப்பாவில் நடைபெற்று வரும் Michelin Le Mans Cup கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் கார் சேதமடைந்த நிலையில், காரில் இருந்த அஜித்குமாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக அவர் முழுமையான பாதுகாப்புடன் காயங்களின்றி தப்பியதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் நலமாக இருப்பது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.




