கோடை வெயிலின் தாக்கம் இப்போது மிக அதிகமாகவே இருக்கிறது. ஆகையால் நம்மால் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் இந்த வெயிலுடன் சேர்த்து அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இருந்தாலும் மற்ற நேரங்களில் வெயில் பலமாக அடிப்பதனால் மக்கள் அனைவரும் ஏசியை மிக அதிகமாக உபயோகித்து வருகின்றனர். வெயிலின் போது ஏசியை பயன்படுத்துவது சரி. ஆனால் ஒரு சிலர் மழை பெய்கின்ற பொழுதும் ஏசியை பயன்படுத்துகின்றனர். அப்படி பயன்படுத்துவது சரியா என்று இந்த பதிவில் காண்போம்.
மழை பெய்கின்ற பொழுது ஏசியை பயன்படுத்தினால் இடி மின்னல் காரணமாக மின்வெட்டு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது. இதனால் அபாயம் நமக்கு பெரிதாக வந்து சேரும். ஆகையால் மழை பெய்கின்ற பொழுது சிறிது நேரம் ஏசி பயன்படுத்துவதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
கனமழையின் பொழுது ஏசியை பயன்படுத்தினால் அதில் ஏற்படும் மின்னல் காரணமாக நமது வீட்டில் இருக்கும் மின்சாதன பொருட்களில் ஒன்றான ஏசியும் பாதிப்படைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் மழை பெய்கின்ற பொழுது ஏசியை உபயோகம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்படி செய்வதுதான் நமது உடலுக்கும் நல்லது வீட்டிற்கும் நல்லது.




