தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழா நடத்தப்படும். அந்த வகையில் இந்தாண்டு விழா கரூரில் இன்று (செப்.17) பிரம்மாண்டமாக நடைபெற்றது. முப்பெரும் விழாவுக்கு இடையே திடீரென கனமழை கொட்டியது. இதையடுத்து நாற்காலிகளை தலையில் தூக்கி வைத்தபடி தொண்டர்கள் நின்றனர்.




