சென்னையில் இன்று (செப்.17) பெரியாருக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என கூறிவிட்டு தற்போது அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்துள்ளார். முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை. தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இபிஎஸ் ஆனால் அவர் நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை” என்றார்.




