மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மல்லை சத்யா மதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (செப்.15) மல்லை சத்யா புதிய கட்சி தொடங்கினார். காஞ்சிபுரத்தில் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




