பொதுத்துறை வங்கிகளில் உள்ள 6,128 கிளார்க் (எழுத்தர்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி 6,128 கிளார்க் (எழுத்தர்) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த தேர்வு குறித்து வங்கி பணியாளர் தேர்வாணையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், பொதுத்துறை வங்கிகளில் கிளிக் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்றுடன் அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில் வரும் 28ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://ibpsonline.ibps.in/crpcl11jun21/
மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.