Indian Oil Corporation Limited எனப்படும் IOCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Junior Attendant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Attendant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Junior Operator – 215 பணியிடங்கள்
Junior Attendant – 23 பணியிடங்கள்
Junior Business Attendant – 8 பணியிடங்கள்
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 26 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் Computer Based Test(CBT) / Skill Proficiency Physical Test(SPPT) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு:
https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/613feac7e44444bb91a7d6b610014b16.pdf




