ஐபிஎல் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று 7:30 மணியளவில் பஞ்சாப் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் சண்டிகரில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 111க்கு 10 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், பிரப்சிம்ரன் 30 ரன்களும் ப்ரியன்ஸ் ஆர்யா 22 ரங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. பௌலிங்கில் டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய கொல்கத்தா அணி சுமாராக தான் விளையாடியது. ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை பெரிதாக வழங்கவில்லை. இறுதியில் கொல்கத்தாவால் வெறும் 95 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.




