ITBP எல்லைக் காவல் படையில் Constable வேலை..!! 520+ காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை ஆனது Constable, Head Constable, Sub-Inspector பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 526 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Constable, Head Constable, Sub-Inspector பணிக்கென கலையாக உள்ள 526 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12 வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18, 20 என்றும் அதிகபட்ச வயதானது 23, 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21700/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Physical Efficiency Test / Physical Standard Test / Document Verification & Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://drive.google.com/file/d/1CipEdADrQ8KzxWg6pkZMwAWQXDxNOM_J/view

Read Previous

கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல்..!! அதே சுவையில் வீட்டில் செய்வது எப்படி?..

Read Next

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்..!! பெற்றோர் உறவினர்கள் சேர்ந்து தர்ம அடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular