சபரிமலை மலைப்பாதையில் திடீர் மாரடைப்பு.. ஆந்திர பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த பக்தர் ஒருவர், மலைப்பாதையில் நடந்து சென்றபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராம்பாபு (45) என்பது தெரியவந்துள்ளது.
ஐயப்பனை தரிசிப்பதற்காக மலைப்பாதையில் ஏறிச் சென்று கொண்டிருந்த ராம்பாபுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் நடந்து செல்ல முடியாமல் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக் கவனித்த அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விரைந்து வந்த மருத்துவக் குழுவினர், அவரை மீட்டு அருகிலிருந்த அவசர சிகிச்சை மையத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ராம்பாபு உயிரிழந்தார். சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் மலைப்பாதையிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




கருத்துகள் (0)